Pages

Sunday, August 22, 2010

பால பாடம்


மூழ்குவதற்கு மூச்சுப்பயிற்சி
பழகினேன் முத்தெடுக்க அல்ல..
மூழ்கியதும்தான் தெரிந்தது
மூழ்குவது கஷ்டம்தான் என்று!!
முறை தெரிந்தால் சொல்லுங்கள்
கடன் கொடுத்தவனை சமாளிக்க..

படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது
கொடுக்கல் வாங்கலில்..

தேவையும் வள‌ர்ச்சியும்
எனக்கு தேவைதான்
தேவையாய் பணம்..

பத்துரூபாய் பார்க்க‌
விலையாய் வியர்வைத்துளி..
தேவைக்கு மிஞ்சியதும்
தேவைதான்
இதுக்கு பெயர்தான்
தொடருமா?..

,

Post Comment

Monday, August 16, 2010

பொய்க்கால் குதிரை

"எலேய் அய்யா.. எங்கலே போற.. இம்புட்டு விரசா.." என்ற பெரியாத்தா பாட்டியின் குரல் என்னை நிறுத்தியது. "பாட்டி நம்மூர்ல கோவிலு கொடல்ல.. அதான்.. சீக்கிரமா போனாத்தானே எல்லாத்தையும் பாக்கமுடியும்.. சப்பரம் வர்றதுக்குள்ள போகணும்பாட்டி.." என்றேன்.

"அது சரில.. ஆனா நம்மளல்லாம் சாமிய‌ பக்கத்துல பாக்கவிட மாட்டாவுலெ.. சத்த தள்ளி நின்னுதான் பாக்கணும்.. இப்படித்தான் உங்கதாத்தா அந்தகாலத்துல சின்னப்புள்ளயா இருக்கும்போது சாமி பக்க‌த்துல பாக்கபோயி அவுகள பஞ்சாயத்துல நிக்க வச்சிப்புட்டாகலே.. காணாக்குறைக்கு சவுக்கடி கொடுத்துருக்காவ.. எதோ தீட்டாமா.. நீயும் பாத்து சூதனமா இருந்துக்கலே.." என்றார் பாட்டி.

"போ பாட்டி.. அதெல்லாம் அந்தகாலம்.. இப்பெல்லாம் அப்படி கிடையாது.. நம்ம நாடு சொதந்திரம் அடஞ்சி 64 வருசம் ஆகிப்போச்சி.. இன்னுமா நம்ம சாதிசனத்துக்கு கட்டுப்பாடு வச்சிருக்காவ.. நீ வேணா பாரேன்.. நா சாமி பக்கத்துல போயி கும்புடுறேன்.."என்றேன் பாட்டியிடம்.

"போலே கூறுகெட்ட குப்பா.. இந்த வியாக்கியானத்துக்கு மட்டும் குறச்சலில்ல.. நீதாம்ல நினைச்சிக்கிரணும்.. காலாகாலம் மாறிக்கிட்டே இருக்குது.. ஆனா இந்த பாவிப்பயலுக மனசு மாறக்காணோம்.. சரிலே பாத்து சூதனமா இரு.. சரியா.. தாத்தாவுக்கு தப்பாமத்தான் இருக்க.. என்ற பாட்டிக்கு சரிப்பாட்டி நா போயிட்டு வாரேன்.." என்று சொல்லியபடி திருவிழா பாக்க கிளம்பினேன்.

இன்னும் செத்த நேரத்துல சாமி பல்லாக்கு சப்பரத்துல ஏறிரும்.. ஏறுனபுறப்பாடு சாமிய பாக்கமுடியாது. போகுற வழில்லாம் ஒரே வானவெடி.. லைட்டு வெளிச்சம் கண்ணக்கூசியது. அம்புட்டு அலங்காரம். அம்மா தந்த காசுக்கு கடலைஉருண்டையும் அப்பளபொறியும் வாங்கிக்கிட்டேன். ராட்டினம், விளாட்டுச்சாமான் கடைகள், ஐஸ்வண்டிக்காரன் பூல்..பூல்.. பாம்பாம் சத்தம் போட்டபடி எல்லாப் புள்ளைகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். பார்க்க ரொம்ப மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

சுத்துராட்டினத்துக்கு 1 ரூபா..ராட்டினத்தில் ஏறியதும் பயமா இருந்திச்சி.. பக்கத்தூட்டு மாரி பக்கத்துல இருந்ததினால அவன பிடிச்சிக்கிட்டேன். நல்ல ஜாலியா இருந்திச்சி..

மைக்கில் "எல்லோரும் சாமிய பாக்கிறதுன்னா பாத்துக்கோங்க" என்ற அறிவிப்பை கேட்டு ஓடினேன். பக்கத்துல போனதும் குறுக்கே கயித்த கட்டிருந்தாக.. அதுக்கு அங்கிட்டு போகமுடியல.. சுத்தும்பத்தும் பார்த்தேன். அங்க ஒரு வழி இருந்திச்சி.. குடுகுடுன்னு ஓடி அந்த வழியா போனேன்.

முதுகில் ஒரு பலமா அடிவிழுந்ததும் அம்மாவ் அம்மாவ்.. என்றபடி திரும்பினேன். "எலேய் செத்தமூதி.. எங்கலே வாரே.. அதான் அங்க கயிறு கட்டிருக்காவல்ல.. அங்க நிக்கமாட்டிகளோ துரை.. பக்கத்துல போயிதான் சாமி கும்புடணுமோ.. வந்துட்டான்.. போல போல.. அடிபட்டு சாவதெ.." என்றார் குடுமிக்காரர் கோபமாக..

யப்பா.. என்னா வலிவலிக்குது.. சே.. பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்.. மூணு தலமுறை கண்டவள்னா சும்மாவா.. என்று நினைத்தபடி வந்தேன்..

ஓடி விளையாடு பாப்பா.......

சாதிகள் இல்லையடி பாப்பா..
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

என்ற பாட்டு ரேடியோவுல ஒலித்துக்கொண்டிருந்தது.

,

Post Comment

Saturday, August 14, 2010

வெள்ளை ரோஜாவும் நானும்..

மலர்களிலே ரோஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ரோஜாவை பிடிக்காதவர்கள் யாரும் இல்லையெனலாம். ரோஜாவை பார்த்ததும் ஒரு சாந்தம் அமைதி வந்துவிடுகிறது. காதலிக்கும் எல்லா காதலர்களின் சின்னமாக அன்பை பரிசாக வழங்கும் இடத்தில் ரோஜா இல்லாமல் முடியாது. மெல்லிய உணர்வில் பயணிக்கும் காதலில் ரோஜா ரோஜாதான். இதுக்குதான் லவ்மூடு ஸ்டார்ட் ஆகிருச்சின்னு சொல்றாங்களோ.. :). எனக்கும் ரோஜாவை ரொம்ப பிடிக்கும்.. கல்லூரியில் படிக்கும்போது ரோஜாவை தலையில் சூடிய பெண்டீரை காணெங்கிலும் யாம் அந்த அழகை ரசிப்போம்.. ரோஜாவை அணிந்ததால் அழகாக இருக்கிறார்களா.. இவர்களால்தான் ரோஜா அழகாக தெரிகிறதா என்று பலமுறை நினைத்ததுண்டு..

கவிதையில் கலக்கும் கவிஞர்களுக்கும் கவிதாயினிக்கும் ரோஜாவை மையப்படுத்தி எழுதாமல் இருக்கமுடியாது.. எனக்கும் அப்படிதான்.. சினிமா பாடல்களிலும் படக்காட்சிகளில் ரோஜாவைதான் முக்கியப்படுத்தி இருப்பார்கள். அந்தளவுக்கு எல்லோருக்கும் ரோஜா மோகம்தான்.

நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் ரோஜாவை கொண்டுதான் ஆரம்பித்திருக்கிறேன்..

என் மனைவிக்கு ரோஜா என்றால் கொள்ளை பிரியம்.. ஊருக்கோ இல்லை வெளிய எங்கு சென்றாலும் ரோஜாப்பூ வாங்கிக்கொடுப்பேன். மிகவும் விரும்புவார்..

ஒருதடவை நானும் என்மனைவியும் சினிமா பார்க்க சென்றோம். அப்போது பஸ் ஸடாண்டில் பிளாட்பாரத்தில் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு கடைக்கு சென்றோம்.. அந்த கடையில் விதவிதமான ரோஜாப்பூக்கள் கடையை அலங்கரித்து எங்களை வசீகரித்தன.. அதில் ஒரு வெள்ளை ரோஜா தலையை நீட்டி என்னை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொள் என்று அழைத்தது. பார்க்க பார்க்க ரொம்ப பரவசமாக இருந்தது.

என் மனைவி அந்த ரோஜாவைக் கண்டதும் உடனே வாங்கிக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் அவரது தலையில் சூட்டினேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது.

படம் பார்க்க போனால் படம் சுமாராக இருந்தது. படம் பார்க்கும்வேளையில் என்மனைவி தலையில் இருந்த ரோஜாப்பூவை காணவில்லை. சே என்ன இது இப்படி ஆகிருச்சே.. அழகான ரோஜா கீழே விழுந்திருச்சே என்று மனைவிக்கு வருத்தமாக இருந்தது. சரி.. சரி.. விடு நா உனக்கு வேற வாங்கித்தாரேன்.. என்று சொன்னேன். இருந்தாலும் வருத்தம்தான்.

இரவு படம் முடிந்து வெளிய வரும்போது தியேட்டர் வளாகத்தில் அந்த வெள்ளை ரோஜா சிரித்துக்கொண்டிருந்தது. உடனே என்மனைவி ஆவலுடன் ஓடோடிச் சென்று அந்த ரோஜாவை கையில் எடுக்கப்போனார். நான் உடனே ஏய்..ஏய்.. அதை கையில் எடுக்காதே.. கீழே கிடந்ததை எடுக்கக்கூடாது.. தூரப்போடு தூரப்போடு என்று சொன்னேன். மறுபடியும் கையில் எடுக்க முனைந்தார். நான் உடனே சத்தம் போட்டேன்.

உடனே என் மனைவிக்கு வருத்தமாக இருந்தது. கோபம்.. தலையை திருப்பிக்கொண்டார். வீட்டுக்கு வந்ததும் நான் ஏன் கீழே விழுந்த ரோஜாவை எடுக்கக்கூடாதென்ற காரணத்தை சொன்னதும் அவரது முகத்தில் அந்த வெள்ளை ரோஜா சிரித்துக்கொண்டிருந்தது.

நான் மறுநாள் விதவிதமான கலர்களில் ரோஜாவை வாங்கிவந்து மனைவியிடம் கொடுத்தேன்.

,

Post Comment

Tuesday, August 10, 2010

போனஉயிர் திரும்ப வருமா..

நெல்லையில் அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி.
பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற பஸ்ஸிலிருந்து இறங்கியதால் மாணவர் அருண்குமார் பலியானார்.

இந்த செய்தியை காலையில் கேட்டதும் மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

நெல்லை புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டரில் தொலைவில் திருநெல்வேலி_ நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ஐ.ஆர்.டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இது அரசாங்க போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சலுகையில் கல்லூரி கட்டணங்கள் அமைந்திருக்கும். இதர மாணவர்களும் படித்து வருகிறார்கள். இந்த பாலிடெக்னிக்கில் சேருவதற்கு கடும்போட்டி உண்டு.

இந்த கல்லூரி புறநகர் பகுதியில் இருப்பதால் அவ்வளவாக பஸ் போக்குவரத்து கிடையாது. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே நெல்லை ஜங்சன் பேரூந்து நிலையத்திலிருந்து பஸ்கள் உண்டு. தவறினால் கல்லூரிக்கு செல்லமுடியாதநிலை. ஆனால் நாகர்கோவில் செல்லும் பேரூந்துகள் மனதுவைத்தால் மட்டுமே செல்லமுடியும். கஷ்டம்தான் இதுமாதிரி புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு..

இன்று பலியான மாணவர் அருண்குமார் தென்காசியை சேர்ந்தவராம்.. தினமும் தென்காசியிலிருந்து நெல்லைக்கு பயணம் செய்து கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரிக்கு நேரமானதால் நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் ஏறி கல்லூரியில் இறங்க திட்டமிட்டு பயணம் செய்தார். ஆனால் கண்டக்டரும் டிரைவரும் கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால் டிரைவரிடம் கெஞ்சியதில் டிரைவர் பஸ்ஸை ஸ்லோ செய்தார். அருண்குமார் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தவறிவிழுந்து பலியானார்.

இந்த மாணவர் எனது உறவினர் மகனின் வகுப்புத் தோழன் என்பதால் மிகவும் வருத்தத்திலும் வருத்தம். இந்த செய்தியை காலையில் கேட்டதும் ரொம்ப மனசு கஷ்டமாகிவிட்டது.

பள்ளி மாணவர்/ கல்லூரி மாணவர்களை கண்டாலே கண்டக்டருக்கும் டிரைவருக்கும் பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை... ஒரு மனிதாபிமானம் இல்லையே.. இறங்குவதற்கு ஒரு நிமிசம் ஆகுமா.. அலட்சியத்தால் ஒரு உயிரை இழக்கவேண்டியதாயிற்றே..

பொதுவாக எங்கெல்லாம் பள்ளி/கல்லூரி நிறுத்தங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பஸ்கள் நிற்கவே நிற்காது. ஒரு அரைகிலோமீட்டர் சென்றுதான் நிறுத்துவார்கள். மாணவர்கள் எல்லோரும் பஸ்கள் பின்னாலே ஓடிவந்து ஏறுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். ஏறியபின்னாடியும் கண்டக்டரிடமிருந்து வசவை வாங்கிவிட்டுதான் பயணிக்க வேண்டும். என்ன கொடுமை இது.. இதுமாதிரி அனுபவங்கள் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.

பஸ்ஸில் ஏற்றிச்சென்றால் குறைந்தா போய்விடுவார்கள் என்ன.. ஏதோ அவர்கள் வீட்டு சொத்தை அபகரித்ததுபோலதான் அங்கலாய்த்து கொள்வார்கள். அதுவும் பஸ்பாஸ் வைத்திருக்கும் சிறுவர்களுக்கு நிறைய வசவு கிடைக்கும்.. அவர்களை தங்கள் பிள்ளைகளை போல நினைக்க மறுப்பது ஏனோ?..

பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தரப்பிலிருந்து கேட்டால் என்ன சொல்வார்கள்.. ஸ்டாப்பிங் கொடுக்காத இடங்களில் நிறுத்த எங்களுக்கு அனுமதி இல்லை. மீறி நிறுத்தும்போது டைம்கீப்பிங்கில் எங்களுக்கு ரீமார்க் கிடைக்கும். மாணவர்களை ஏற்றி இறக்கும்போது காலவிரயமாகும். நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லாவிட்டால் பதில் சொல்லவேண்டியிருக்கும். அதுபோக மாணவர்கள் பஸ்ஸுக்குள் சேட்டை செய்யும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். இதை தவிர்க்கவே மாணவர்களை பஸ்ஸுக்குள் ஏற அனுமதிப்பதில்லை.

இவர்கள் இப்படி சொன்னால் மாணவர்களின் போக்குவரத்து கேள்விக்குறியாகிறது. பள்ளி/கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிறது. மாணவர்களை எல்லா நேரங்களிலும் ஏற்றிச்செல்ல வேண்டியதில்லையே.. பள்ளி/கல்லூரி நேரங்களான காலை, மாலை வேளை நேரங்களில் தானே மாணவர்கள் செல்வார்கள். அந்த நேரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் மனிதாபிமான நோக்கோடு உதவி செய்யலாமே..

எப்படிதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் இறந்த அந்த மாணவனின் உயிர் திரும்ப கிடைக்குமா..

வரும்காலங்களில் இதுமாதிரி வருந்ததக்க சம்ப‌வங்கள் நடைபெறாமலிருக்க போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுக்குமா..

என்பதே நம் அனைவரின் கேள்வியும்..

,

Post Comment

Sunday, August 8, 2010

விருது பெற அனைவரும் வருக

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா.. சகோதரி ஆசியாக்கா அவர்கள் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். அதனை உங்கள் அனைவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.

இந்த விருதுக்கு பெயர் தன்னிகரற்ற தனித்துவம் மிக்க அவுட்ஸ்டாண்டிங் ப்ளாக்கர் விருது.


இந்த விருதினை எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ராகவன் நைஜீரியா, அக்பர், ஸாதிகா அக்கா, சித்ரா, ஜெய்லானி, அப்துல்காதர், ஹேமா, மின்மினி, ஆனந்தி, அம்பிகா, அஹமது இர்ஷாத், ரியாஸ், இளம் தூயவன், அமைதிச்சாரல் அக்கா, ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர், ஹூசைனம்மா, சினேகிதி பாய்சா காதர், மேனகா சத்தியா, கீதா ஆச்சல், விஜீஸ் கிச்சன், காஞ்சனா ராதாக்கிருஷ்ணன், அன்புடன் மலிக்கா, ஜலீலா, அப்பாவி தங்கமணி, அனன்யா மஹாதேவன், நாஞ்சில் பிரதாப், ஸ்டீபன், மங்குனி அமைச்சர், கண்ணா, ஜெட்லி, நேசமித்ரன், அபுல் பசர், கோவி.கண்ணன், சே.குமார், கார்த்திக் எல்கே, சரவணக்குமார், பனித்துளி சங்கர், பலா பட்டறை சங்கர், சிங்கை பிரபாகர், ராமசாமி கண்ணன், பா.ராஜாராம், கார்த்திக் சிதம்பரம், தேவா, நண்டு @ நொரண்டு ராஜசேகர், வசந்த், கமலேஷ், ராஜ வம்சம், சேக் முக்தார், தேனம்மை லட்சுமணன், சீனா அய்யா, எறும்பு ராஜகோபால், தமிழ்துளி டாக்டர் தேவா, பழனி டாக்டர் சுரேஷ், வானம்பாடிகள் அய்யா, க. பாலாசி, ரோகிணி சிவா, ஈரோடு கதிர் சார், சின்ன அம்மிணி மேடம், துளசி டீச்சர், ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், சுசி, கௌசல்யா, ஜெயந்தி, கவிசிவா, சீமான்கனி, டி.வி.ராதாகிருஷ்ணன் சார், வெ.ராதாக்கிருஷ்ணன் சார், மதுரை சரவணன், ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார், ஜெரி ஈசானந்தா சார்..

மற்றும் இந்த வரிசையில் விடுபட்ட அனைவர்களுக்கும் இந்த விருதினை வழங்குகின்றேன்.

விருதினை பெற்றுக்கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

விருது பெற அனைவரும் வருக வருக என வரவேற்கின்றேன்.

உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

Monday, August 2, 2010

அழகுக்குட்டி செல்லம்..


அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்...
ஆளைக் கடத்திப்போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டிக்கொண்டேன்.. திரும்பி போக மாட்டேன்...


பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..,
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்...


அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.. அந்திப்பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்.

உலகஅழகி நாந்தான் உலகஅழகி நாந்தான்..

செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது
கூ
..கூ.. குக்கூ குக்கூ..கூ கூ என கூவும்

குயில்
சின்னசின்ன சந்தத்தில் அந்திப்போர் நடக்கும்..


தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன் தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னை காண பயந்தேன் கரைந்தேன்..

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும்
மலரும் புது தாளம் போட்டு

புதுசா
புதுசா அதை காதில் கேட்டு..



மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முத்தம்
தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

அது
மலரின் தோல்வியா

இல்லை
காற்றின் வெற்றியா..


தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்..
பனிகள்
போலவே அசைந்து ஆடுதே தீபமே..

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ()
கண்ட
பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத்
தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள்
தீண்டவும்விடமாட்டேன்
உனை
வேறு கைகளில்தரமாட்டேன்
நான்
தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா
...ரோஜா ...ரோஜாரோஜா ...

இந்த படங்களை அனுப்பிய‌ என் நண்பருக்கு நன்றி.

**************************

எனக்கு பிடித்த பாடல்
----------------------------

Post Comment

Sunday, August 1, 2010

லேட்டா வந்தது தப்பா...


முதல் மணியோசை
தூரத்தில் ஒலிக்க
அம்மா படத்தை வணங்கி
திருநீர் இட்டு, சம்படமும்
பைக்கட்டும் தோளில்
கூடவே வர ஓட்டமும்
நடையும் விரைகையில்
அந்தோ!! 2வது மணியோசை
நிறுத்தியது என்னை
பள்ளி நுழைவாயிலில்..

தாமதம் தான் என்ன செய்ய..
கைமொழியில் இரண்டு அடியும்
நாலணா அபராதமும்
கொடுத்துவிட்டு
பள்ளியறையினில்
நுழைகையில் டீச்சர்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்ற குறளுக்கு விளக்கம்
கொடுத்துக் கொண்டிருந்தவர்
என் தாமத வருகையினால்
குறள் மங்கி குரல்
ஓங்கி ஒலித்தது
"மூதேவி மூதேவி..
எப்பப்பாரு லேட்டுதான்..
பரட்டத்தலையோட...
உள்ள வந்துத் தொலை என்று.."

ஏய் ஏய்.. இதுவரை என்ன‌
என்று அருகாமையை வினவியதில்
டீச்சரின் குரல் மேலும்
என்னை கலவரமாக்க..
"எலே உருப்படாதவனே..
வந்ததே லேட்டு., அங்க என்ன‌
சலசலன்னு பேச்சி.."
அவரது பார்வையில்
நானொரு .......

யாரெல்லாம் வீட்டுப்பாடம்
எழுதலைன்னு கேட்க‌
கோபப்பட்டு சபையிலிருந்து
வெளியேறுபவன் போல‌
விருட்டென எழுந்த என்னை..

"தெரியுமே தெரியுமே..
அது நீதான்னு...
வர்றது லேட்டு
எப்பப்பாரு பேச்சி..
வீட்டுப்பாடம் எழுதாத தில்லு..
படிச்சி கிழிச்சது போதும்
வீட்டுல உங்கம்மா அப்பாவ‌
கூட்டிட்டுவா.."

என்று முன்பைவிட
குரல் ஓங்காரமாய் ஒலிக்க‌

நீட்டுடா கையை என்றவருக்கு
உள்ளத்தை காட்டும்
கண்ணாடி போல
உள்ளங்கையை
நான் காண்பிக்க..

எப்படியும் அடி பிண்ண போறாங்க‌
ரொம்ப வலிக்குமே
கண்களை மூடியபடி
என்கையை நீட்டியபடியே
நின்ற என்காதுகளில்

"டீச்சர் அவனுக்கு
அம்மா கிடையாது.."

என்ற குரல் ஒலித்தது.

"எலே என்னடா இது..
கையில் கொப்பளமா..
எப்படிடா இதெல்லாம்"
வினவிய டீச்சருக்கு

"என்ன சொல்ல..
அம்மா இற‌ந்ததும்
சித்தி வந்தகதையை சொல்லவா..
தன் குழந்தையை
சீராட்டி வளர்த்த சித்தி
என்னை பரதேசியாய்
அலையவிட்ட கதையை சொல்லவா..
வீட்டுவேலை செய்யமுடியாமல்
செய்து படிக்க உட்காரும்போது
கையில் சூடுபோட்ட கதையை சொல்லவா..
எந்த கதையை நான் சொல்ல..
நான் லேட்டா வந்தது தப்பா.."

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க...

கண்மூடி நின்ற எனக்கு
எதோ உணர்வு என்னைத் தாக்க‌

டீச்சரின் கண் நீர் என்
கொப்பளத்துக்கு
மருந்தினை கொடுக்க..
அவரின் அணைப்பினில்
என் அன்னையின்
அரவணைப்பை கண்டேனே...

***************

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்